பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியின் 20வயதுக்குட்பட் ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்தில் உள்ள அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் R.M.அஷான் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த போட்டியானது இன்று (11) பியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில்
நடைபெற்றது. முதலாவது இடத்தை மேல் மாகாணமும், மூன்றாவது இடத்தை சப்ரகமுவ மாகாணமும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாதனையை நிலைநாட்டிய மாணவனுக்கும் இவரை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் H.M.Suhail இதனைநெறிப்படுத்தி வழிகாட்டிய உடற்கல்வி சிரேஷ்ட ஆசிரியர் S.தினேஷ்குமார் மற்றும் F.பஹீம் அகமட் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.